புதிய இயல்பில் சுதந்திர தினம்

கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக இந்த ஆண்டின் தேசிய தின  கொண்டாட்டம் புதிய இயல்பின் கீழ் முற்றிலும் மாறுபட்ட முறையில் நடைபெற்றது. அதில் மெர்டேக்கா  உணர்வுகள்  வெளிப்படையாகவே இருந்தன..

தேசிய தினத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான நகரவாசிகள் கூடியிருந்த வரலாற்று இடமான டத்தாரான் மெர்டேக்கா, நள்ளிரவு வரை வாணவேடிக்கைக்களுடன் பிரபலமான கலைஞர்களின் நிகழ்ச்சிகளால்  மூழ்கியிருந்தன.

இந்த 63 ஆவது தேசிய தினத்தில் ஒரு சில மாநிலங்கள் மட்டுமே நிகழ்ச்சிகளை நடத்தின. இருப்பினும் பார்வையாளர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவது உட்பட நிலையான இயக்க நடைமுறை (எஸ்ஓபி) க்கு இணங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

எவ்வாறாயினும், சுதந்திரத்தின் பொருளை உணர்த்த பல்வேறு வழிகள் கையாளப்பட்டன, இதில் நேகாராகு பிரச்சாரம், தகவல் தொடர்பு மல்டிமீடியா அமைச்சின் முன்முயற்சி, வீடியோக்கள், புகைப்படங்கள், உரைகள் போன்ற ஆக்கபூர்வமான படைப்புகளைப் பகிரவும் பதிவேற்றவும் மக்கள் ஊக்குவிக்கப்பட்டனர்.

மலேசிய தொலைக்காட்சி ஆர்.டி.எம்.  ஒரு சிறப்பு இசை நிகழ்ச்சியை ‘கித்தா மெர்டேகா 1957- 2020’ என்ற முழக்கத்தில் ஆடிட்டோரியம் பெர்டானாவில்  தொடங்கியது.

இந்நாளில் டத்தோ ஜமால் அப்டில்லா, வானி ஹஸ்ரிதா, ஹக்கீம் ருஸ்லி , குகிரான் மஸ்டோ, பங்க்ஃபேஸ் இசைக்குழுக்கள் உள்ளிட்ட உள்ளூர் கலைஞர்களின் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

தகவல் தொடர்பு, மல்டிமீடியா துறை அமைச்சர் டத்தோ சைபுதீன் அப்துல்லா, துணை அமைச்சர் டத்தோ ஜாஹிடி ஜைனுல் அபிதீன், அமைச்சக பொதுச்செயலாளர் டத்தோ சூரியானி அகமது ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

பெர்லிஸில், வாவாசன் ஹாலில் நடந்த மெர்டேக்கா  இரவு கொண்டாட்டம்,  150 விருந்தினர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தது, அவர்கள் முகக்கவசம்  அணிந்து  மண்டபத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவதற்கு முன்பு உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

பெர்லிஸின் ராஜா துவாங்கு சையத் சிராஜுதீன் புத்ரா ஜமலுல்லைல்,  பெர்லிஸின் ராஜா பெரெம்புவான், துவாங்கு தெங்கு பவிசியா தெங்கு அப்துல் ரஷீத் ஆகியோர் கலந்து கொண்டனர், இரவு உணவு , பெர்லிஸ்  மாநில மந்திரி பெசார்  டத்தோ ஶ்ரீ  அஸுக் ஆகியோரின் உரையும் இடம்பெற்றது.

சரவாக் நகர் ஸ்ரீ அமானில் உள்ள ஒரு ஹோட்டலில் 250 விருந்தினர்கள் முன்னிலையில் சுதந்திர தினம் மிதமாக கொண்டாடப்பட்டது. சரவாக் கலை மன்ற உறுப்பினர்களின் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here