மகாராஷ்டிரத்தில் புதிதாக 341 காவலர்களுக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே கொரோனா தொற்றால் அதிகம் பாதிப்புக்குள்ளாகியுள்ள மாநிலம் மகாராஷ்டிரம். அங்கு கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் காவலர்கள் அதிகளவில் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இதுபற்றிய சமீபத்திய அறிவிப்பை மகாராஷ்டிர காவல் துறை வெளியிட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 341 காவலர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பாதிப்புக்குள்ளான காவலர்களின் மொத்த எண்ணிக்கை 15,294 ஆக உயர்ந்துள்ளது. இதில் 12,306 பேர் குணமடைந்துள்ளனர், 156 பேர் பலியாகியுள்ளனர். இன்றைய நிலவரப்படி 2,832 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மகாராஷ்டிரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 1,93,889 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.