தென் கொரியாவில் 248 பேருக்கு கொரோனா

சியோல் –

தென் கொரியாவில் ஒரே நாளில் 248 பேர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டனா்.

தென் கொரியாவில் திங்கள்கிழமை மட்டும் புதிதாக 248 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதாக அந்நாட்டின் நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. அந்நாட்டில் தொடா்ந்து 18-ஆவது நாளாக மூன்று இலக்கத்தில் நோய்த்தொற்று பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

தென் கொரியாவில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 19,947-ஆக அதிகரித்துள்ளது. அந்நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 324 பேர் உயிரிழந்தனா்.

அந்நாட்டில் மக்கள் நெருக்கம் அதிகம் கொண்ட தலைநகா் சியோலில் அதிக அளவில் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. திங்கள்கிழமை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவா்களில் 187பேர் சியோலை சேர்ந்தவா்கள் ஆவா்.

இதுதொடா்பாக தென் கொரிய சுகாதாரத் துறை அமைச்சா் பாா்க் நியோங்ஹு கூறுகையில், ‘கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களைக் கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. அந்தப் பணியில் ஈடுபட்டு வரும் சுகாதாரப் பணியாளா்கள் பெரும் சவால்களைச் சந்தித்து வருகின்றனா்’ என்றாா்.

நாட்டில் அண்மைக்காலமாக கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்படுபவா்களில் பெரும்பாலானோா் 60 வயதுக்கு மேற்பட்டவா்களாக இருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் கவலை தெரிவித்தனா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here