தேர்வு எழுதிய சாய் பல்லவி

திருச்சிக்கு தேர்வு எழுத வந்த நடிகை சாய் பல்லவியுடன் மாணவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகிவருகிறது.

வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை முடித்து இந்தியாவுக்கு வரும் மாணவர்கள், இங்கு மருத்துவராக பணியாற்ற வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரி தேர்வில் (FMGE- Foreign Medical Graduate Examination) தேர்ச்சி பெறுவது அவசியம். அதாவது அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய 5 நாடுகளில் மருத்துவப் படிப்பு முடித்தால் இந்த தேர்வை இந்தியாவில் எழுதத் தேவையில்லை.

ரஷ்யா , சீனா , வங்கதேசம் , பிலிப்பைன்ஸ் , ஜார்ஜியா உள்ளிட்ட நாடுகளில் மருத்துவம் படித்தவர்கள் இந்தியாவில் மருத்துவராக பணியாற்ற இந்தத் தேர்வில் வெற்றி பெற வேண்டும் . அதையொட்டி தேசிய தேர்வு வாரியம் , ஜூன் மற்றும் டிசம்பர் என ஆண்டுக்கு 2 முறை இந்தத் தேர்வை நடத்தி வருகிறது .

கொரோனா தொற்று பரவல் காரணமாக ஜூன் மாதம் நடைபெறவிருந்த இந்தத் தேர்வு தள்ளிவைக்கப்பட்டு , ஆகஸ்ட் 31 ஆம் தேதி நடைபெற்றது . இந்தத் தேர்வுக்காக திருச்சி சிறுகனூர் எம் . ஏ . எம் பொறியியல் கல்லூரிக்கு நடிகை சாய் பல்லிவ வந்திருந்தார் . அந்த தேர்வு மையத்தில் அவர் தேர்வு எழுதினார் . இவர் , ஜார்ஜியா நாட்டில் மருத்துவப் படிப்பு முடித்துள்ளார் .

அப்போது அவரை அடையாளம் கண்டு கொண்ட சக தேர்வர்கள் அவரை மொய்த்து எடுத்து அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர் .

திருச்சிக்கு தேர்வு எழுத வந்த நடிகை சாய் பல்லவியுடன் மாணவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகிவருகிறது.

அப்போது அவரை அடையாளம் கண்டு கொண்ட சக தேர்வர்கள் அவரை மொய்த்து எடுத்து அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here