சசிகலா சிறையில் இருந்து எப்போது வெளியே வருவார் ?

சசிகலா இந்த மாத இறுதியில் வெளியே வருவார் என்று அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சசிகலாவிற்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர் . சில நாள்களுக்கு முன் கர்நாடக சிறைத்துறை நன்னடத்தை அடிப்படையில் சசிகலாவை சிறையில் இருந்து சில மாதங்களில் விடுதலை செய்ய உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இதற்கு சிறைத்துறை இயக்குனர் மெக்ரித், சசிகலாவிற்கு நன்னடத்தை விதிமுறைகள் கிடையாது தண்டனை முழுவதும் அனுபவித்த பின்புதான் சசிகலா விடுதலை ஆவார் என கூறினார்.

இதனைத்தொடர்ந்து சசிகலாவை அதிமுகவில் இணைவது குறித்து பல கருத்துக்கள் வெளியாகி வருகின்றனர். அதில் அதிமுகவினர் சிலர் சசிகலாவை கட்சியில் இணைத்துக் கொள்ள மாட்டோம் எனவும், சிலர் அதை பற்றி தலைமைதான் முடிவு செய்யும் என கூறி வருகின்றனர். இந்நிலையில் சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் கூறுகையில் , சிறையில் அளிக்கப்படும் சலுகையில் அடிப்படையில் இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்தில் சசிகலா விடுதலையாவார் என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here