இலங்கைக்கு அமெரிக்கா பகிரங்க எச்சரிக்கை

இலங்கைக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது அமெரிக்கா. எதற்காக தெரியுங்களா?

கறுப்புப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள சீனத் தொடர்பாடல் நிர்மாண நிறுவனத்துடன் தொடர்புகளை வைத்திருக்கும் இலங்கை இதுதொடர்பில் மீள் பரிசீரனை செய்ய வேண்டுமென அமெரிக்கா எச்சரித்துள்ளது.

கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது: குறித்த நிறுவனத்தினாலேயே கொழும்பு துறைமுக நகரம் உள்ளிட்ட பல்வேறு நிர்மாணப் பணிகள் இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த நிர்மாண நிறுவனம் இந்திய பசுபிக் பிராந்தியத்தில் அமைதியின்மையை ஏற்படுத்துவதுடன், சுற்றாடல் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது.

இவ்வாறான முறைகேடுகள் மற்றும் இறையாண்மை மீறலில் இருந்து நாடுகள் தம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here