தியேட்டர்கள் திறப்பு எப்போது?

நாடு முழுவதும் திரையரங்குகள் திறப்பது குறித்து வரும் 8ம் தேதி மத்திய அரசு ஆலோசனை ஆலோசனை மேற்கொள்ள உள்ளது.

கொரானோ வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது .இதனால் நாடு முழுவதும் 5 மதத்திற்கும் மேலாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன.

இதனால் பல படங்கள் தயாரிக்கப்பட்டு போஸ்ட் புரடக்ஷன் பணிகள் நடைபெறாமல் உள்ளன. இதனால், தமிழக சினிமா உலகம் தினமும் கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டத்தில் சென்று கொண்டிருக்கிறது.எனவே பல திரைப்படங்கள் ஓடிடி தளத்தில் வெளியிடும் போக்கு ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில் திரையரங்குகளை மீண்டும் திறப்பது குறித்து மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை அமைப்பு திரையரங்கு உரிமையாளர்கள், தியேட்டர் அதிபர்கள் சங்கத்தினருடன் 8ஆம் தேதி கலந்தாலோசனை நடத்துகிறது.

மேலும் தியேட்டர் திறப்பு குறித்த ஆலோசனையில் தென்னிந்தியாவில் உள்ள எந்த சங்கத்திற்கோ, தியேட்டர் உரிமையாளர்களுக்கோ அழைப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here