வைரமுத்து ஆசிரியர் தின வாழ்த்து

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமது ட்விட்டர் பக்கத்தில் ‘ஆசிரியர் குலத்திற்கு என் கனிந்த கைகூப்பு’ என கவிப்பேர வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 5-ந் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. வாழ்க்கையில் மிகப் பெரும் செல்வமான கல்வியை தங்களுக்கு கற்றுத் தந்த ஆசிரியர்களுக்கு சிறப்பு செய்கிற திருநாளாக இந்திய சமூகம் கொண்டாடி மகிழ்கிற நாள் இது.

இந்த நாளில் கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட்டிருக்கும் வாழ்த்து:

கல்லூரிப் பேராசிரியர்கள்

எனக்கு உரமிட்டவர்கள்;

பள்ளி ஆசிரியர்களே நட்டவர்கள்.
காலச்சக்கரம் பின்னோக்கிச் சுழன்றால்

பள்ளி நாட்களுக்கே பயணப்படுவேன்.

அவர்களைப் பார்த்துப்

பேராசிரியனாகவே ஆசைப்பட்டேன்;

காலம் என்னைப் பாடலாசிரியனாக்கிற்று.

ஆசிரியர் குலத்திற்கு

என் கனிந்த கைகூப்பு.

இவ்வாறு வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here