50 ஆயிரம் ஓட்டுநர்களை இலக்காக கொண்டு கோஜோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது

கோஜோ மின்னியல் வாடகை கார் நிறுவனம் 50 ஆயிரம் ஓட்டுநர்களை இலக்காக கொண்டு செயல்பட்டு வருவதாக அதன் தலைமை இயக்குநர் பிரதீப் குமார் தெரிவித்தார்.

கடந்த 7ஆம் மாதம் கோஜோ மின்னியல் வாடகை கார் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது.

புதிய நிறுவனமாக இருந்தாலும் ஓட்டுநகளிடையே இருந்து நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது.

இதுவரை 3 ஆயிரம் ஓட்டுநர்கள் கோஜோவில் இணைந்துள்ளனர். வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் பதிவு செய்யும் ஓட்டுநர்களுக்கு 250 வெள்ளி மின் பணப்பை வழங்கப்படவுள்ளது. அதே வேளையில் இரண்டு மாதங்களுக்கு எந்தவொரு பணப் பிடிப்பும் இருக்கது என்று அவர் கூறினார்.

தற்போது 3 ஆயிரம் ஓட்டுனர்களுக்கு 5 லட்சம் வெள்ளி மின் பணப்பையை கோஜோ வழங்கி உள்ளது.

இதனை அடிப்படையாக கொண்டு அடுத்தாண்டுக்குள் குறைந்தது 50 ஆயிரம் ஓட்டுநர்களை கொண்டிர்ருக்க கோஜோ திட்டமிட்டுள்ளது.

நாட்டின் 63ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஓட்டுநர்களுக்கு சுவாசக் கவசம் மற்றும் தேசிய கொடிகளை கோஜோ நிறுவனம் வழங்கியது.

என்.எஸ்.கேப்பிடல் வெஞ்சர்ஸ் நிறிவனத்தின் தலைவர் டத்தோஸ்ரீ என்.சுரேந்திரன் இந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here