மீறலுக்கு அபராதம் மிகையில்லை!

மொத்தம் 264 தனிநபர்கள் RM1,000 வீதம் அபராதம் செலுத்தினர்.  இவர்கள் மாவட்டத்தின்  கூலாய் நகரத்தைச் சுற்றி பொழுதுபோக்கு மையங்களிலும்,இடைவெலி நெருக்கத்தின் மூலமும்  மீட்பு இயக்கம் கட்டுப்பாட்டு ஆணையை (RMCO) மீறியதற்காகஅபராதம் செலுத்தினர்.

ஜொகூர் போதைப்பொருள் குற்றவியல் புலனாய்வுத் துறைத் தலைவர் ஏ.சி.பி மொகமட் அப்சானிசாம் யஹ்யா கூறுகையில் பல பொழுதுபோக்கு மையங்களில் நடத்தப்பட்ட நான்கு சோதனைகளின்போது சோதனை செய்யப்பட்ட 295 பேரில்  இவர்கள் இயக்கக் கட்டுப்பாட்டை மீறியிருப்பது தெரியவந்தது என்றார்.

சனிக்கிழமை இரவு 11 மணிக்கு நடத்தப்பட்ட சோதனையில், நகரத்தில் உள்ள ஒரு பொழுதுபோக்கு மையத்தில் கூடியிருந்த மொத்தம் 152 நபர்கள் பரிசோதிக்கப்பட்டதாகவும், அவர்களில் 3 பேர், 23 முதல் 36 வயதுடையவர்கள், போதைப்பொருளுக்கான அற்குறியில் இருந்ததாகவும் அவர் கூறினார்.

இவர்களில் 32 வயதான ஒரு நபர், வளாகத்தின் உரிமையாளர் என்றும் அவர் மதுபானங்களை விற்பனைச் சேவை செய்வதன் மூலம் வணிக உரிமத்தின் விதிமுறைகளை பின்பற்றத் தவறிவிட்டார் என்ரும் அவர் கூறினார்.

தவிர உடல் ரீதியான தூரத்தை கடைபிடிக்கவில்லை. வணிகத்திற்கான நிலையான இயக்க நடைமுறைகள் (SOP) பின்பற்றவில்லை என்று அவர் ஓர் அறிக்கையில் கூறினார்.

நகரத்தின் சுற்றியுள்ள பொழுதுபோக்கு வளாகங்களில் நடந்த மற்ற மூன்று சோதனைகளில், மொத்தம் 143 நபர்கள் சோதனை செய்யப்பட்டதாகவும்  அவர் கூறினார்.

இதில் 17 முதல் 56 வயதுடைய 31 நபர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியது  கண்டறியப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here