நடமாட்ட கட்டுபாட்டை மீறிய 221 பேர் கைது

மீட்சியுறும் நடமாட்டக் கட்டுபாட்டை மீறிய 221 பேரை போலீஸார் கைது செய்ததாக தற்காப்பு துறை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சபரி யாக்கோப் தெரிவித்தார்.

அதில் 118 பேர் இரவு கேளிக்கை மையங்களில் கூடியவர்கள். கைதானவர்களில் 212 பேருக்கு கம்பாவ்ண்ட் விதிக்கப்பட்டது. 8 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

வாடிக்கையாளர்களின் தகவல்களை பெறாத 34 பேர், கூடல் இடைவெளியை கடைப்பிடிக்காத 43 பேர், முகக் கவசம் அணியாத 18 பேர், தனிமைப்படுத்துதலை மீறிய ஒருவர், கூடுதல் நேரம் வரை செயல்பட்ட 5 பேர், சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்த 2 என அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டின் எல்லைப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் ஓப்ஸ் பெந்தேங் எனப்படும் சோதனையின் வழி கள்ளத் தனமாக நாட்டிற்குள் நுழைய முயற்சித்த 66 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூலை 24ஆம் தேதி முதல் நேற்று வரை 25,688 பேர் தாயகம் திரும்பியுள்ளனர். அவர்கள் 70 ஹோட்டல் மற்றும் 8 பொது பயிற்சி மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, இந்தோனேசியா, கம்போடியா, சிங்கப்பூர், வியட்நாம், புருணை, கத்தார், பாக்கிஸ்தான், அராப் சவுதிம், ஹாங்காங், இந்தியா, ஜப்பான், துர்க்கி, கொரியா, இரான், நேபால், வங்காளதேசம், மியன்மார், திமோர் லேஸ்தே, தைவான், சீனா, இங்கிலாந்து, நெதர்லாந்து, பப்புவா நியூ ஜுய்னியா, மேசிர், ஸ்பெய்ன், பிரான்ஸ், ஆஸ்திரோலியா, நியூசிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 32 நாடுகளில் இருந்து பலர் தாயகம் திரும்பியுள்ளனர்.

மொத்தம் 10,390 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதோடு 68 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் டத்தோஸ்ரீ இஸ்மாயில் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here