அரசியல்வாதிகளுக்கு, குறிப்பாக மந்திரி பதவிகளில் இருப்பவர்களுக்கு தலைமைத்துவம் உந்துதலாக இருக்க வேண்டும்.
இந்த கொள்கையை பின்பற்றத் தவறியவர்கள் பணிநீக்கம் உள்ளிட்ட ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு மேற்கோள் காட்டப்பட வேண்டும் என்று முன்னாள் துணை கல்வி அமைச்சர் தியோ நீ சிங் கூறியிருக்கிறார்.
சபாவின் பிடாஸில் உள்ள தனது கிராமமான கம்போங் செபடாலாங் கிராமத்தில் சிறந்த இணையத் தொடர்பைப் பெறுவதற்காக ஒரு மரத்தில் ஏறி இணையத்தொடர்பைப் பெற்ற வீடியோவை வேவோனா என்ற மாணவர் வெளியிட்டிருந்தார். அப்படிச்செய்ததால் அவர் தேர்வில் இணைய முடிந்தது.
தகவல்தொடர்பு பன்முனைத்தகவல் துணை அமைச்சர் டத்தோ ஜாஹிடி ஜைனுல் ஆபிடின் அவரை மரப் பெண் என்று குறிப்பிட்டிருந்தார்., ஆனால், பின்னர் தனது அறிக்கையை அவர் வாபஸ் பெற்று மன்னிப்பு கோரினார்.
துணை நிதி அமைச்சரும், குடாத் எம்.பி.யுமான டத்தோ அப்துல் ரஹீம் பக்ரி, வேவோனா தனது இணைய அணுகலின் இக்கட்டான நிலையைப் போலியானதாகக் கூறினார்.
இருப்பினும், சபாவின் முன்னாள் மந்திரி டத்தோஶ்ரீ மாசிடி மஞ்சுன், ஜூன் மாதத்தில் வேவொனா தேர்வுக்கு அமர்ந்ததை உறுதிப்படுத்தினார்.
வேவோனாவை பகிரங்கமாக அவமானப்படுத்துவது கல்வியின் நோக்கத்திற்கு எதிரானது என்றும் அது தனிநபரின் தனிப்பட்ட வளர்ச்சியில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் தியோ கூறினார்.
பிரதமர் டான்ஸ்ரீ முஹிடீன் யாசின் இரு துணை அமைச்சர்களையும் கண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பத்து கவான் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டு கூறுகையில், வேவோனாவுக்கு எதிரான இழிவான கருத்துக்களை இணைய கொடுமைப்படுத்துதலுடன் ஒப்பிட்டார்.
ஒருவரை குறிவைக்கும்போது மனநிலையைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். சமூக ஊடகங்களில் வேவொனா வெளியேறிவிட்டார் என்பது அவரின் மனநிலை எவ்வாறு நல்லதை விட அதிக சேதத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் பற்றி நிறைய கூறுகிறது என்றார் தியோ
வேவேனாவைப் பற்றி மோசமான நோக்கத்துடன் தகவல்களை வழங்கிய அதிகாரிகளுக்கு எச்சரிக்கைக் கடிதங்கள் அனுப்பப்பட வேண்டும் என்று கஸ்தூரி பட்டு கூறினார்.
பொதுமக்களிடமிருந்து எதிர்மறையான ஆன்லைன் எதிர்வினைகளை இளைஞர்கள் எவ்வாறு கையாள முடியும் என்று கேட்டபோது, ஒரு சூழ்நிலையின் உண்மை தெரியாமல் பலர் வாய்மொழி தாக்குதல்களை நடத்துவது மிகவும் வருத்தமாக உள்ளது என்றார் அவர்.
விஷத்தை புறக்கணித்து, தேவைப்பட்டால் தடுக்கவும். அதே நேரத்தில், எதிர்மறையான கருத்துக்களைப் புகாரளிக்கவும் வேண்டும் என்றும் அவர் கூறினார்.