அலைபாயுதே, மின்னலே, கன்னத்தில் முத்தமிட்டால், டும்டும்டும், ரன் என அடுத்தடுத்த திரைப்படங்கள் தொடர்ந்து வெற்றி பெற தமிழில் முன்னணி நடிகரானார் மாதவன். தமிழில் மிக பிஸியாக நடித்து வந்த இவர் ஆரம்பத்திலிருந்தே ஹிந்தி சீரியல்களிலும் திரைப்படங்களிலும் நடித்து வர ஹிந்தியிலும் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து அங்கும் தனது வெற்றிக் கொடியை நாட்டினார். தற்போது இவர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவதார் கெட்டப்பில் வீடியோ ஒன்றை எடுத்து பதிவிட்டுள்ளார். அதில், நானும் இப்பொழுது அவதாரமாக மாறிவிட்டேன், ” அவதாரில் நானும் ஒரு பார்ட் ” என கூறியவாறு வெளியிட்டிருக்கும் இந்த வித்தியாசமான அவதார் வீடியோ இப்பொழுது சமூக வலைதளங்களில் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வைரலாகி வருகிறது.