தாயில்லா குழந்தையை கட்டையால் அடித்துக் கொன்ற பெரியம்மா

சாப்பிடாமல் அடம் பிடித்த தாயில்லா குழந்தையை, அவரது பெரியம்மா அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே மேலவிழி கிராமத்தை சேர்ந்த ரோசாரியோ – ஜெயராணி தம்பதியின் 5 வயது குழந்தை ரென்சிமேரி. ஜெயராணி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அதைத்தொடர்ந்து ரோசாரியோ வேறொரு திருமணம் செய்துகொண்டார்.

ஜெயராணியின் மகளை அவளது சகோதரி ஆரோக்கியமேரி வளர்த்து வந்தார். இந்நிலையில் குழந்தைக்கு சாப்பிடஆரோக்கியமேரி இட்லி கொடுத்துள்ளார்.ஆனால் சாப்பிட மறுத்த குழந்தை பக்கத்து வீட்டுக்கு ஓடிவிட்டது.

இதனை அறிந்த ஆரோக்கியமேரி , குழந்தையை ரோட்டில் போட்டு அடித்து மீண்டும் வீட்டுக்குள் அழைத்து வந்து கட்டையால் தாக்கி உள்ளார் . குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்து வீட்டினர் , கதவை திறந்து குழந்தையை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் .

ஆனால் சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதனைத்தொடர்ந்து தியாகதுருகம் போலீசார் ஆரோக்கியமேரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here