விமானப்படையில் சேர்க்கப்படுகிறது ரபேல் போர் விமானங்கள்

ரபேல் போர் விமானங்கள் இன்று முறைப்படி விமானப்படையில் சேர்க்கப்படவுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு பிரான்சில் இருந்து இந்திய விமானப்படைக்கு 36 ரபேல் போர் விமானங்களை வாங்க இரு நாட்டு அரசுகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுனது. இந்த விமானங்களை பிரான்சின் டசால்ட் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது.இந்த 36 விமானங்களில் முதல் 10 விமானங்களின் தயாரிப்பு பணி முடிவடைந்ததால் கடந்த அக்டோபர் மாதம் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரான்ஸ் சென்று விமானங்களுக்கு பூஜையும் செய்தார்.10 விமானங்களில் 5 விமானங்கள் பயிற்சிக்காக பிரான்சிலேயே இருந்தது. மீதமுள்ள 5 விமானங்கள் பிரான்சில் இருந்து இந்தியாவில் ஹரியானா மாநிலத்தில் அம்பாலா விமான தளத்தில் வந்தடைந்தது.

இந்நிலையில் அம்பாலா விமானப்படை தளத்தில்நீற்று நடைபெறும் நிகழ்ச்சியில்,5 ரபேல் விமானங்கள் முறைப்படி விமானப்படையில் இணைக்கப்படுகின்றது.இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் , பிரான்ஸ் பாதுகாப்புத்துறை அமைச்சர் பிளாரன்ஸ் பார்லி மற்றும் முப்படை தளபதிகள் பங்கேற்கின்றனர். இந்த விழாவில் பங்கேற்பதற்காக இன்று காலையில் இந்தியா வருகிறார் பிளாரன்ஸ் பார்லி.இந்த நிகழ்ச்சிக்குப்பின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் அம்பாலாவில் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்து உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here