நடிகர் கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் நடிக்கும் புதிய படம் ஒன்றில் அவருக்கு பாட்டியாக இந்தியாவின் புகழ்பெற்ற பாடகி நடிக்கிறார்.
ட்ரெண்ட் லவுட் என்ற நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகை அக்ஷரா ஹாசன் நடிக்க உள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. அந்த நிறுவனம் வெப் சீரிஸ்களை எடுத்துவந்த நிலையில், முதல்முறையாக முழு நீள திரைப்படத்தை எடுக்க உள்ளது.
இந்தத்திரைப்படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு எழுந்த நிலையில், அடுத்த முக்கிய அப்டேட்டாக அந்தப்படத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற பாடகி உஷா உதுப் நடிக்க இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.