புதிய நம்பிக்கையை பெற்ற கனடா மக்கள்

சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் பல்வேறு பாதிப்புகளை உலகம் முழுவதும் ஏற்படுத்தி வருகிறது. இதனால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இருப்பினும், முன்பை காட்டிலும் தற்போது இந்த பாதிப்பை பல நாடுகள் சிறப்பாக கையாண்டு கட்டுப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், கனடாவில் கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை தற்போது 0 ஆக பதிவாகியுள்ளது புதிய நம்பிக்கையை அந்நாட்டு மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பு தொடங்கி ஆறு மாதம் ஆன நிலையில் ஆகஸ்ட் இறுதி வாரத்தில் இருந்து ஒற்றை இலக்கில் பதிவான இறப்பு விகிதம் செப்டம்பர் 11 முதல் ஒருவர் கூட உயிர் இழக்காத நிலையை எட்டியுள்ளது. அங்கு இதுவரை 1.35 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here