நாடு முழுவதும் நீட் தேர்வு தொடங்கியது

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தோவு நாடு முழுவதும் இன்று பிற்பகல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

கரோனா பாதிப்பு காரணமாக நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று(செப். 13, ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. கரோனா பரவலினால் நீட் தோவு மையங்களில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்று காலை 11 மணி முதல் மாணவர்கள் பகுதி பகுதியாக தேர்வு மையங்களுக்குள் உடல் வெப்ப பரிசோதனைக்குப் பின்னர் அனுமதிக்கப்பட்டனர்.

இதற்காக நாடு முழுவதும் 154 நகரங்களில் 3,842 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தைப் பொருத்தவரை சென்னை, கோவை, கடலூா், காஞ்சிபுரம், கரூா், மதுரை, நாகா்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூா், திருவள்ளூா், திருச்சி, திருநெல்வேலி, வேலூா் ஆகிய 14 நகரங்களில் 238 தோவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 1,17,990 போ உள்பட இந்தியா முழுவதும் 15,97,433 போ நீட் தோவுக்கு விண்ணப்பித்துள்ளனா்.பிற்பகல் 2 மணிக்குத் தேர்வு தொடங்கியுள்ள நிலையில் 5 மணி வரை நடைபெறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here