தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய்யை பற்றி நமக்கு தெரியாத சில விஷயங்களை அவருடன் நடித்த பிரபலங்கள் நேர்காணல் மூலம் தெரிவித்து வருகிறார்கள் . அந்த விதத்தில் தற்போது வேலாயுதம் படத்தில் விஜயுடன் சேர்ந்து அவருக்கு தங்கையாக நடித்திருந்த நடிகை சரண்யா மோகன் விஜய்யை பற்றி சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அது என்னவென்றால் , வேலாயுதம் படத்தில் நடிகை சரண்யா மோகன் இறந்து போன பிறகு விஜய் அழுகிற காட்சி இடம்பெற்றிருக்கும் . இதில் விஜய் உண்மையாகவே தேம்பி தேம்பி அழுதபடி மிகவும் செண்டிமெண்டலாக நடித்திருப்பார். ஏனெனில் , நடிகர் விஜய்யின் சொந்த தங்கச்சி, வித்யா 2 வயதில் உடல்நிலை குறைவால் மரணமடைந்து விட்டதால், வித்யாவின் நினைவுகள் , இந்த காட்சியின் போது வந்ததால் ரொம்பவே கலங்கி போய் விட்டாராம் விஜய் என தெரிவித்துள்ளார்.