சண்டையில் ஈடுபட்ட எழுவர் கைது

பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீசாருக்கு நேற்று (13/9/2020) மாலை 5.36 மணியளவில் ஜாலான் 10/11 பிஜேஎஸ் அடுக்குமாடி வளாகத்தில் சண்டை நடைபெறுவதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து அங்கு பணியில் இருக்கும் போலீசாருக்கு உடனடியாக தகவல் வழங்கப்பட்டது.

விவரம் அறிந்து அங்கு விரைந்த போலீசாரை கண்டதும் அனைவரும் தலைதெறிக்க அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இருந்த போதிலும் போலீசார் சம்பவ இடத்தில் 35 வயது முதல் 45 வயதிலான மூவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அவர்கள் வழங்கிய தகவலின்படி அன்று இரவு 11 மணியளவில் மேலும் 36 வயது முதல் 46 வயதுடைய மேலும் நால்வரை பெட்டாலிங் ஜெயா பிபிஆர் அடுக்குமாடி குடியிருப்பில் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் வழங்கிய தகவலின் படி சண்டைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை அருகிலுள்ள குப்பை மேட்டில் இருந்து போலீசார் கண்டெடுத்தனர். போலீசார் கைது செய்தவர்களிடம் இருந்து 3 கைபேசி, ரத்தம் நோய்ந்த ஒரு டீசர்ட்ஸ் உள்ளிட்ட பல பொருட்களை கைப்பற்றியுள்ளனர். மேலும் கைது செய்யப்பட்டவர்கள் மீது ஏற்கனெவே குற்றப்பதிவு இருப்பதாகவும் பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நிக் ஏசானி தெரிவித்தார்.

இவர்கள் அனைவரையும் செக்‌ஷன் 148 கீழ் 4 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 வருட சிறைத்தண்டனை அல்லது அபராதமோ அல்லது இரண்டுமே விதிக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார். படங்கள்: எல்.கே.ராஜ்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here