லட்சகணக்கான நுகர்வோரை பாதித்த நீர் விநியோகம் – சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றச்சாட்டு

பெட்டாலிங் ஜெயா: ராவாங்கில் சுங்கை கோங் ஆற்றை மாசுபடுத்தியதாக நான்கு நிறுவன இயக்குநர்கள் மற்றும் ஒரு தொழிற்சாலை மேலாளர் மீது இன்று குற்றம் சாட்டப்படும். இது சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் லட்சகணக்கான நுகர்வோரை பாதிக்கும் பெரும் நீர்வழங்கல் பாதிப்பை ஏற்படுத்தியது.

சில சந்தேக நபர்கள் மீது தண்டனைச் சட்டத்தின் பிரிவு 430 மற்றும் சுற்றுச்சூழல் தரச் சட்டம் 1974 இன் பிரிவு 25 ன் கீழ் குற்றம் சாட்டப்படும் என்று சிலாங்கூர் சிஐடி தலைவர் மூத்த உதவி ஆணையர் டத்தோ ஃபட்ஸில் அஹ்மத் தெரிவித்தார். மேலும் நான்கு சந்தேக நபர்கள் விடுவிக்கப்பட்டதாகவும், அவர்கள் சாட்சிகளாக அழைக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

“ஐந்து பேர் மீதும் காலை 8 மணிக்கு செலயாங் அமர்வு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்.” தொழிற்சாலையில் இருந்து வந்த எண்ணெய் மாசுபாட்டைத் தொடர்ந்து, நான்கு சுங்கை சிலாங்கூர் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டியிருந்தது. இதன் விளைவாக நீர் வழங்கல் தடைபட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here