இணையத் தள சூதாட்டத்தில் ஈடுபட்ட மூவர் கைது

பெட்டாலிங் ஜெயா: இணையத் தள சூதாட்டம் குறித்து பொதுமக்கள் வழங்கிய புகாரினை தொடர்ந்து பெட்டாலிங் மாவட்ட போலீசார் சுங்கை வே வட்டாரத்தில் இருக்கும் உணவகம் ஒன்றில் 14 பேரிடம் மேற்கொண்ட சோதனையின் போது 45 வயது மற்றும் 58 வயதுடைய இரு உள்நாட்டு ஆடவர்களை கைது செய்தனர். அவர்கள் கடந்த மூன்று வாரமாக DOLPHIN REEF மற்றும் ROULETTE  ஆகிய இணையத் தள சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததை ஒப்புக் கொண்டனர்.

 

மேலும் அவர்கள் வழங்கிய தகவல் அடிப்படையில் 30 வயதிற்கு மேற்பட்ட ஒரு வெளிநாட்டு பெண்மணியை ஜாலான் எஸ்எஸ் 9ஏ/2 என்ற முகவரியில் போலீசார் கைது செய்தனர். அப்பெண்ணின் கைப்பேசியில் இணையத்தள விளையாட்டிற்கான ஆஃப் இருந்ததை போலீசார் கண்டறிந்தனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் செக்‌ஷன் 4(1)(C) கீழ் கைது செய்யப்பட்டு 4 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக பெட்டாலிங் மாவட்ட போலீஸ் தலைவர் நிக் ஏசானி தெரிவித்தார்.

படங்கள் : எல்.கே.ராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here