சீனாவிடம் இந்திய வீரர்கள் சரணடைந்தனரா?? குளோபல் குண்டு!

இந்திய வீரர்கள் சீனா ராணுவத்திடம் சரணடைந்ததாக குளோபல் டைம்ஸ் தலையங்கம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா-சீன எல்லையில் தொடர்ந்து படைகளும்,ஆயுத தளவாடங்களும் குவிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் பலகட்ட பேச்சு வார்த்தைகளும் இருநாட்டுக்கும் இடையில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தான் இந்திய வீரர்கள் மலைகளில் இருந்து உருண்டும் ஆறுகளில் விழுந்தும் மரணமடைந்ததாகவும்,இந்திய வீரர்கள் சீனா ராணுவத்திடம் சரணடைந்தாக குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது. சீனாவின் அரசு ஊடகமாக செயல்பட்டு வரும் குளோபல் டைம்ஸ் கால்வன் மோதல் குறித்து ஒரு தலையங்கம் வெளியிட்டுள்ளது.

அதில் இந்திய ராணுவத்திடம் சீன வீரர்கள் ஒருவர்கூட சரணடையவில்லை என்றும் கால்வன் பள்ளத்தாக்கு மோதலில் சீன வீரர்கள் பலியானது உண்மைதான் என்று கூறியுள்ள குளோபல் டைம்ஸ் சீன வீரர்கள் கொல்லப்பட்டது உண்மை ஆனால் அது இந்தியா சொல்லும் எண்ணிக்கையைவிட குறைவு என்று தெரிவித்துள்ளது.

இது நாள் வரை ஒரு சீன விரர்கள் கூட இறக்கவில்லை என்று கூறிவந்த சீனா தற்போது அதன் ஊடகம் மூலமாக வீரர்கள் கொல்லப்பட்டதை பகீரங்கமாக தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here