மோடியின் 70வது பிறந்த நாளில்…

பிரதமர் நரேந்திர மோடியின், 70வது பிறந்த நாளையொட்டி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, பா.ஜ.,வின், மாவட்ட, மாநில ஊடக பிரிவின் சார்பில், கேக் வெட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது. கிருஷ்ணகிரி புதுப்பேட்டை காந்திசாலையில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாநில ஊடகப்பிரிவு மாநில செயலாளர் அகத்தியன் சரவணன் தலைமை வகித்தார்.

மாநில செய்தி தொடர்பாளர் நரசிம்மன், மாநில செயற்குழு உறுப்பினர் ஹரி கோட்டீஸ்வரன் ஆகியோர், மோடியின், 70வது பிறந்தநாளையொட்டி, 70 அடி நீளத்தில், 70 கிலோ எடை கொண்ட கேக் வெட்டி, பொதுமக்களுக்கு வழங்கினர். மேலும், ஒரு லட்சம் பேருக்கு முக கவசம், கொரோனா தடுப்பு ஹோமியோபதி மாத்திரை மற்றும் 2,000 பேருக்கு அன்னதானம் ஆகியவை வழங்கப்பட்டன.

70 கோவில்கள் அன்னதானத்துக்கு, அரிசி, எண்ணெய் ஆகியவையும் வழங்கப்பட்டன. இதில், அர்ச்சுணன், கண்ணப்பன், மாதவன் உள்பட பலர் பங்கேற்றனர். மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் வேள்வேந்தன் நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here