கொரேனா அச்சுறுதுதலுக்கு இடையே வருகிற 27-ந் தேதி முதல் அக்டோபர் 11-ந் தேதி வரை பாரீஸ் நகரில் ‘பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி நடக்கிறது. கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற இந்த போட்டியில் இருந்து முன்னணி வீராங்கனையான ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா காயம் காரணமாக விலகியுள்ளார்.
இது குறித்து நவோமி ஒசாகா தனது டுவிட்டர் பதிவில்,
எதிர்பாராதவிதமாக இந்த ஆண்டுக்கான பிரெஞ்ச் ஓபனில் என்னால் விளையாட முடியவில்லை. காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு இன்னும் குணம் அடையவில்லை. எனவே களிமண் தரையில் நடைபெறும் இந்த போட்டிக்கு தயாராக எனக்கு போதிய காலஅவகாசம் இல்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.
உலக தரவரிசையில் 3-வது இடல் இருக்கும் நவோமி ஒசாகா கடந்த வாரம் முடிந்த அமெரிக்க ஓபனில் சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.