புதுமை ஆன்-லைனில் சர்க்கஸ் காட்சி

கேரளாவில் சர்க்கசுக்கு புத்துயிரூட்டும் வகையில், ஆன்-லைன் காட்சி நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாட்டில் தற்போது கொரோனா ஊரடங்கால் சர்க்கஸ் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் சர்க்கஸ் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாததோடு, உணவு அளிக்கவும் முடியாத நிலை உள்ளது. இந்நிலையில், கேரள  மாநிலம் ஆலப்புழா கார்த்திகைப்பள்ளி பகுதியை சேர்ந்த சுஜித் என்பவரால் ராம்போ சர்க்கஸ் நடத்தப்பட்டு வருகிறது. இவர் சர்க்கஸ் காட்சிகளை ஆன்லைனில் நடந்த முயற்சி மேற்கொண்டுள்ளார்.

இதற்காக  மை-ஷோ எனும் இணையதளம் வாயிலாக டிக்கெட் புக்கிங் செய்யப்படும். முதல்  ஆன்-லைன் ராம்போ சர்க்கஸ் காட்சி வரும் 25ம் தேதி தொடங்குகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here