தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவின் பி ஸ்டுடியோ தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிகர் ஆர்கே சுரேஷ் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவர் அறிந்ததே. பாலாவின் ‘தாரை தப்பட்டை’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
தற்போது பாலா தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வரும் 23ஆம் தேதி காலை 9.30 மணிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிடவுள்ளார்.
விக்ரம் மகன் துருவ் விக்ரமை வைத்து பாலா இயக்கிய ‘வர்மா’ திரைப்படம் ரிலீஸாகாத நிலையில் அவருடைய அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை. இந்நிலையில் பாலாவின் பி ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.