மிஷ்கின் பிறந்த நாளில் வெளியானது பிசாசு 2 படத்தின் அறிவிப்பு

இயக்குநர் மிஷ்கின் மீண்டும் ஒரு புதிய திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இயக்குநர் பாலா தயாரிக்கும் இந்த படம் பிசாசு 2 என்ற பெயரில் எடுக்கப்படுகிறது. இதை பற்றிய விவரங்கள் தற்போது வலைத்தளங்களில் வெளியாகி இருக்கிறது.

சண்முகராஜா என்ற இயற்பெயரைக் கொண்ட இயக்குநர் மிஷ்கின் அவர்கள் தி இடியட் என்ற ரஷ்ய நாவலில் வரும் மிஷ்கின் என்ற பெயரை சினிமாவிற்காக வைத்துக் கொண்டார். வித்தியாசமான காட்சி அமைப்புகள் மற்றும் எளிமையான கதைகளுக்காக பெயர் பெற்றவர் இயக்குநர் மிஷ்கின். இவருடைய படங்களுக்கென ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றவர்.

2016ஆம் ஆண்டு வெளிவந்த சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். பிறகு அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய், முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாலன், சவரக்கத்தி, சூப்பர் டீலக்ஸ், சுட்டுப் பிடிக்க உத்தரவு, சைக்கோ ஆகிய வெற்றிப்படங்களை இயக்கி இருக்கிறார். மேலும் இவர் நந்தலாலா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சில திரை பாடல்களையும் பாடி இருக்கிறார்.

இவர் 2014ஆம் ஆண்டு பிசாசு என்னும் திகில் திரைப்படத்தை எழுதி இயக்கி இருந்தார். இது பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. இந்த படத்தை இயக்குநர் பாலா அவர்கள் தனது பி ஸ்டுடியோ நிறுவனத்தின் மூலம் தயாரித்திருந்தார். இந்த படத்தில் நாகா, பிரயகா மார்டின், ராஜ்குமார், அஷ்வத், ராதாரவி, கல்யாணி நடராஜன், ஹரிஷ் உத்தமன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் கன்னட மொழியில் ராக்சசி என்ற பெயரிலும் ஹிந்தியில் நானு கீ ஜானு என்ற பெயரிலும் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் இரண்டாம் பாகமாக பிசாசு 2 என்னும் படத்தை மிஷ்கின் அவர்கள் இயக்க இருக்கிறார். இந்த புதிய திரைப்படத்தை டி.முருகானந்தம் அவர்கள் ராக் ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். கார்த்திக் ராஜா அவர்களின் இசையமைப்பில் உருவாகும் இந்த படத்தில் ஆண்ட்ரியா ஜெர்மியா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

 

இயக்குநர் மிஷ்கின் அவர்களின் பிறந்த நாளாகிய இன்று இந்த படத்தை பற்றிய அறிவிப்பை நள்ளிரவு பன்னிரண்டு மணியளவில் படக்குழுவினர் வெளியிட்டனர். இந்த திரைப் படத்தின் படப்பிடிப்பு நவம்பரில் தொடங்குகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here