தைவான் அதிபர் ட்சாய் இங் வென் ஜப்பான் பிரதமர் யோஷிஇடே சுகா வை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடும் திட்டம் இப்போதைக்கு இல்லை என கடந்த ஞாயிறன்று பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உடல்நலக்குறைவு காரணமாக பதவி விலகினார். இதனை அடுத்து யோஷிஇடே சுகா புதிய பிரதமராக பதவியேற்றுள்ளார். முன்னொரு காலத்தில் ஜப்பானால் ஆளப்பட்ட தைவானில் இன்னும் ஜப்பானிய கலாச்சாரம் உள்ளது.ஆனால் ஜப்பானும் தற்போது சீனாவுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறது.
சீன கம்யூனிச அரசு ஹாங்காங்கைப்போல தைவானையும் ஆக்கிரமித்து அங்கு தேசிய பாதுகாப்பு சட்டத்தை கொண்டுவர முயன்று வருகிறது. இதனால் முன்னதாக சீனா-தாய்வான் கடல் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது.
இரு நாடுகளும் தங்கள் ராணுவம் மற்றும் கப்பல் படையை உஷார் படுத்தினர். தற்போது ஜப்பான் பிரதமர் சுகாவிடம் இதுகுறித்து கலந்து ஆலோசிக்க தைவான் அதிபர் ட்சாய் தயாராக இல்லை. இதனை ட்சாய் பத்திரிகை பேட்டியில் உறுதிப்படுத்தியுள்ளார். சீனாவின் அத்துமீறலை ஒடுக்க தைவான் ஜப்பான் உதவியை நாட வாய்ப்புள்ளது எனக் கூறப்பட்ட நிலையில், தைவான் அதிபர் இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஜப்பான் சீனாவுடன் மற்ற தெற்காசிய நாடுகள் போலவே நட்பு பாராட்டவே விரும்புவது இதற்கு ஒர் முக்கிய காரணம். இந்த விவகாரத்தில் தனக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்பட்டுவரும் நேரத்தில் ஜப்பானிடம் உதவி கேட்கத் தேவையில்லை என தைவான் அரசு நினைக்கிறது என அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.