‘விசித்திரன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.
கடந்த 2018-ம் ஆண்டு மலையாளத்தில் எம்.பத்மகுமார் இயக்கத்தில் ஜோஜூ ஜார்ஜ், ஆத்மியா ராஜன், மாளவிகா மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ஜோசப்’.மலையாளத்தில் நல்ல வரவேற்பைப் பெற்ற இத்திரைப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் வாங்கினார்.
இதையடுத்து ‘ஜோசப்’ தமிழ் ரீமேக்கில் ஜோஜூ ஜார்ஸ் கேரக்டரில் ஆர்.கே.சுரேஷ் நடிப்பது உறுதியாகி படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இயக்குநர் பாலாவின் பி ஸ்டுடியோஸ் தயாரித்த இத்திரைப்படத்தை மலையாளத்தில் இயக்கிய எம்.பத்மகுமாரே இயக்கினார். இந்நிலையில் இந்தப் படத்துக்கு ‘விசித்திரன்’ என்று பெயர் வைத்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இதையடுத்து படக்குழுவினருக்கு தமிழ் திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இத்திரைப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். மதுஷாலினி, பூர்ணா உள்ளிட்டோர் ‘விசித்திரன்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://twitter.com/Siva_Kartikeyan/status/1308617179621781505/photo/1?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1308617179621781505%7Ctwgr%5Eshare_3&ref_url=https%3A%2F%2Ftamil.news18.com%2Fnews%2Fentertainment%2Fcinema-joseph-tamil-remake-titled-vichithiran-first-look-released-msb-349643.html