ஆணுறைகளை சுத்தம் செய்து மீண்டும் விற்க முயற்சி

வியட்நாமில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட சுமார் 3,20,000 ஆணுறைகளை சட்ட விரோதமாக விற்க முயற்சி செய்தது தெரிய வந்துள்ளது.

இந்த ஆணுறைகளை வாடிக்கையாளர்களுக்கு விற்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில் அந்நாட்டு போலீஸார் அவற்றை கைப்பற்றியுள்ளனர்.

ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள் சுத்தம் செய்யப்பட்டு, பழைய வடிவத்திற்கு கொண்டுவந்து மீண்டும் புதிதான ஒன்று போல பேக் செய்யப்பட்டு அவற்றை விற்பனை செய்ய இருந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக வெளியான காணொளியில் வியட்நாமின் வட பின் டுஆங் மாகாணத்தில் உள்ள ஒரு கிடங்கில் நடந்த சோதனையில் 360 கிலோ எடை கொண்ட பல பைகளில் பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள் இருந்தன.

இந்த கிடங்கிற்கு உரிமையாளர் என நம்பப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒரு கிலோ ஆணுறைகளுக்கு 0.17 டாலர்கள் கொடுக்கப்பட்டதாக கைது செய்யப்பட்ட பெண் கூறியதாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இது போன்ற பயன்படுத்தப்பட்ட எத்தனை ஆணுறைகள் ஏற்கனவே சந்தையில் விற்கப்பட்டுள்ளன என்பது தெளிவாக தெரிய வரவில்லை.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here