கூகுள் டூடுல் இந்திய நீச்சல் வீராங்கனையான ஆரதி சஹாவை கௌரவப்படுத்தியுள்ளது.
நீண்ட தூரம் நீச்சல் செய்து சாதனை புரிந்த இவர், செப்டம்பர் 29, 1959 அன்று ஆங்கிலேய நீரோட்டத்தை நீந்தி கடந்த முதல் ஆசிய பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இவர் கேப் கிரிஸ் நெஸ், பிரான்ஸ் நாட்டிலிருந்து சாண்ட் கேட் மற்றும் இங்கிலாந்திலிருந்து ஆங்கிலேய நீரோட்டத்தை கடக்க 42 மைல் தூரம் நீந்தியுள்ளார். இந்த சாதனையை பெறுமைப்படுத்தும் வகையில் அந்த சிறப்பு ஓவியம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கல்கத்தாவில் 1940 இல் பிறந்த ஆரத்தி சஹா, ஹூக்லி ஆற்றின் கரையில் நான்கு வயதில் நீச்சல் கற்றுக்கொண்டுள்ளார். இந்தியாவின் சிறந்த நீச்சல் வீரர்களில் ஒருவரான சச்சின் நாக் வழிகாட்டுதலில் நீச்சல் விளையாட்டில் பயிற்சிப் பெற்றுள்ளார். தனது ஐந்து வயதிலேயே, 100 மீட்டர் ஃப்ரீஸ்டைல் போட்டியில் பங்கேற்று, தனது முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
1960ஆம் ஆண்டில் இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த விருதான பத்மஸ்ரீ விருதை பெற்ற முதல் இந்திய விளையாட்டு வீராங்கனை ஆரத்தி சஹா என தகவல்கள் வெளிபடுத்துகிறது.
செப்டம்பர் 24 ஆம் தேதி தனது 80 வது பிறந்த நாளை நினைவுகூறும் வகையில் கூகுள் நிறுவனம் ஆரத்தி சஹாவிற்கு கிராஃபிக் ஓவியம் ஒன்றை வடிவமைத்து அங்கீகாரம் அளித்துள்ளது. இந்த சிறப்பு டூடுலை கொல்கத்தாவை சேர்ந்த லாவன்யா நாயுடு வடிவமைத்துள்ளார்..
“பிறந்தநாள் வாழ்த்துக்கள், ஆரத்தி சஹா, எல்லா இடங்களிலும் பெண்களை ஊக்கப்படுத்த உங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தியதற்கு நன்றி” என்று கூகுள் டூடுல் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
https://twitter.com/GoogleDoodles/status/1308980477617991686/photo/1?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1308980477617991686%7Ctwgr%5Eshare_3&ref_url=https%3A%2F%2Ftamil.asiavillenews.com%2Farticle%2Fgoogle-doodle-commemorates-the-birth-of-indian-women-swimmer-59603