சீனா: ஆண்டுக்கு 100 கோடி கொரோனா தடுப்பூசிகள்

ஆண்டொன்றுக்கு 10 கோடி கொரோனா தடுப்பூசிகளைத் தயாரிக்கும் திறனை சீனா பெறும் என்று அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து, சீன தேசிய சுகாதார ஆணையத்தைச் சோந்த ஷெங் ஷோங்வெய் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

சீனாவிலுள்ள மருந்து ஆலைகளின் கொரோனா தடுப்பூசி உற்பத்தித் திறன், இந்த ஆண்டு இறுதியில் ஆண்டுக்கு 61 கோடி என்ற நிலையை அடையும். அடுத்த ஆண்டுக்குள், ஆண்டுக்கு 100 கோடி கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் திறனை சீனா பெற்று விடும்.பொதுமக்களிடையே முன்னுரிமையின் அடிப்படையில் கொரோனா தடுப்பூசி விநியோகிக்கப்படும். சுகாதாரப் பணியாளா்கள், எல்லையில் பணியாற்றும் வீரா்கள், வயது முதியவா்கள் ஆகியவற்கு கொரோனா தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றாா் அவா்.தற்போது 11 வகையான கொரோனா தடுப்பூசிகளை சீனா சோதித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here