தாய் உயிரிழந்ததாக மகன் தற்கொலை; அதிர்ச்சியில் தாய் மரணம்

தூத்துக்குடி மாவட்டம், நா.முத்தையாபுரத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரது தாயார் கங்காதேவி கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மணிகண்டன் வந்த போது தாய் கங்காதேவி மயக்க நிலையில் இருந்துள்ளார்.

இதனைக் கண்ட மணிகண்டன், தனது தாயார் உயிரிழந்துவிட்டதாக நினைத்து, சோகம் தாளாமல், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது வீட்டிற்கு வந்த தந்தை, மணிகண்டன் தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

மயக்கம் தெளிந்த தாயிடம் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை கூறியவுடன், அதிர்ச்சியில் கங்காதேவியும் உயிரிழந்தார். உடல்நிலை சரியில்லாத தாயை காப்பாற்ற முடியாமல் போய்விட்டதே என்ற கவலையில் மகனும், மகன் உயிரிழந்த அதிர்ச்சியில் தாய் உயிரை விட்டதும், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here