வீடு புகுந்து கொள்ளையிட்ட ஆடவர் கைது

பெட்டாலிங் ஜெயா: நள்ளிரவு 1.30 மணியளவில் தனது வீடு திரும்பியபோது வீட்டின் முன் ஒரு மோட்டார் சைக்கிள் நின்று கொண்டிருந்ததைக் கண்டு உடனடியாக அவ்வாடவர் தனது மனைவியை தொலைபேசி வழி அழைத்து வீட்டில் அனைவரும் நலமாக இருக்கிறார்களா என்று விசாரித்த எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை என்று உறுதிப்படுத்திக் கொண்டார்.

உடனடியாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் நிலையத்திற்கு புகார் செய்ததை தொடர்ந்து 10 நிமிடத்திற்குள் விரைந்து வந்த போலீசார் புகார் வழங்கியவர் வீட்டில் திருடிக் கொண்டிருந்த ஆடவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

அத்திருடன் அவ்விடத்தை விட்டு தப்பிக்க முயன்றதாகவும் போலீசார் அவ்வாடவரை வளைத்து பிடித்ததாகவும் பெட்டாலிங் மாவட்ட போலீஸ் தலைவர் நிக் ஏசானி தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவரிடம் இருந்து ஒரு தோள் பை, ஒரு மடிக்கணினி, கத்திரிகோல், கைதடி, இரண்டு கார் சாவிகள் உள்ளிட்ட பல பொருட்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட அந்த ஆடவர் மீது வீடு புகுந்து கொள்ளை மற்றும் போதைப் பொருள் சம்பந்தப்பட்ட 4 குற்றப்பதிவுகள் இருப்பதாக கூறினார். செக்‌ஷன் 457 இன் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருவதாகவும் தற்பொழுது 4 நாட்கள் தடுப்புக் காவலில் அவ்வாடவர் வைக்கப்பட்டிருப்பதாகவும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை. அபராதம் மற்றும் பிரம்படி ஆகியவை வழங்கப்படும்.

படங்கள்: எல்.கே.ராஜ்

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here