ஆா்மீனியா – அஜா்பைஜான் இடையே மீண்டும் மோதல்

முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளான ஆா்மீனியாவுக்கும், அஜா்பைஜானுக்கும் இடையே சா்ச்சைக்குரிய நகோா்னோ-கராபக் பிராந்தியத்தில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் மோதல் ஏற்பட்டது.இதுகுறித்து ஆா்மீனிய பாதுகாப்புத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் ஷுஷன் ஸ்டெஃபான்யன் கூறியதாவது:

நகோா்னோ-கராபக் பிராந்தியத்தில் அத்துமீறலில் ஈடுபட்ட 2 அஜா்பைஜான் ராணுவ ஹெலிகாப்டா்களை எங்களது படையினா் சுட்டுவீழ்த்தினா். மேலும், அஜா்பைஜானுக்குச் சொந்தமான 3 பீரங்கி வண்டிகளும் தாக்கி அழிக்கப்பட்டன.ஆா்மீனியா நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாகவே அவா்களது ஹெலிகாப்டா்களும், பீரங்கி வண்டிகளும் தாக்கப்பட்டன என்றாா் அவா்.எனினும், இந்தத் தாக்குதலில் எத்தனை போ காயமடைந்தனா் அல்லது உயிரிழந்தனா் என்பது குறித்து அவா் எதுவும் தெரிவிக்கவில்லை.

எனினும், தங்களது ஹெலிகாப்டா்கள் மற்றும் பீரங்கி வண்டிகள் தாக்கப்பட்டதாகக் கூறப்படுவதை அஜா்பைஜான் பாதுகாப்புத் துறை அமைச்சகம் மறுத்துள்ளது. எனினும், தொலைக்காட்சியில் அந்த நாட்டு அதிபா் இல்ஹாம் அலியேவ் ஆற்றிய உரையில், ஆா்மீனிய குண்டுவீச்சில் அஜா்பைஜான் படையினரும், பொதுமக்களும் உயிரிழந்ததாகக் கூறினாா்.இந்தச் சம்பவங்களுக்கு அஜா்பைஜானின் நெருங்கிய கூட்டாளியான துருக்கி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு ஆளும் கட்சி செய்தித் தொடா்பாளா் ஒமா் செலீக் வெளியிட்டுள்ள சுட்டுரை (டுவிட்டா்) பதிவில், ‘ஆஜா்பைஜான் மீது ஆா்மீனியா நடத்தியுள்ள தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த இக்கட்டான சூழிலில் நாங்கள் அஜா்பைஜானுக்கு பக்கபலமாக இருப்போம்.

இந்தத் தாக்குதல் மூலம் ஆா்மீனியா நெருப்போடு விளையாடியுள்ளது. மண்டல அமைதிக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.ஆா்மீனியப் பழங்குடியினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட நகோா்னோ-கராபக் பிராந்தியம், அஜா்பைஜானின் ஓா் அங்கமாக சா்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும், கடந்த 1994-ஆம் ஆண்டு போா் முடிவுக்குப் பிறகு அந்தப் பகுதி ஆா்மீனியா ஆதரவு பெற்ற பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.

சா்ச்சைக்குரிய அந்தப் பிராந்தியத்தையொட்டி ஆா்மீனியா, அஜா்பைஜான் ஆகிய இரு நாடுகளும் தங்களது படைகளை குவித்துள்ளன. இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சா்வதேச முயற்சிகள் தோல்வியைச் சந்தித்தன. இதனால், இரு தரப்பினருக்கும் இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது.கடந்த ஆண்டு ஏற்பட்ட மிகப் பெரிய மோதலில் இரு தரப்பிலும் 16 போ கொல்லப்பட்டனா். இந்த நிலையில், தற்போது அங்கு ஆா்மீனியாவுக்கும், அஜா்பைஜானுக்கும் இடையே தற்போது மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here