கடலுார் மாவட்டத்தில் 28 இடங்களில் நிறுவப்பட்டுள்ள பெரியார் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.திருச்சி அருகில் உள்ள இனாம்குளத்துார் ஊராட்சியில் பெரியார் சமத்துவபுரம் எதிரில் அமைக்கப்பட்டிருந்த பெரியார் சிலை மீது மர்ம நபர்கள் காவி சாயம் பூசி அவமரியாதை செய்தனர்.
இதற்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அதன் எதிரொலியாக தமிழகத்திலுள்ள அனைத்து பெரியார் சிலைகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.கடலுாரில் அண்ணா மேம்பாலம் இறக்கத்தில் நிறுவப்பட்டுள்ள பெரியார் சிலைக்கும் எஸ்.பி., ஸ்ரீஅபிநவ் உத்தரவின்பேரில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேப்போல மாவட்டம் முழுவதும் 24 இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.