மக்களை எலியாக்கிய சீனா ரகசிய தடுப்பூசி பரிசோதனை

கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசிகளை, கட்டாயப்படுத்தி, ரகசியமாக தன் நாட்டு குடிமக்களிடம் பரிசோதனை செய்வதாக, சீன அரசு மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், அதை சீனா மறுத்துள்ளது.நம் அண்டை நாடான சீனாவில், கடந்தாண்டு இறுதியில் துவங்கிய, கொரோனா வைரஸ் பரவல், உலகெங்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திஉள்ளது. இந்த வைரசுக்கு எதிராக தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்திட்ள்பட பல நாடுகள் ஈடுபட்டுள்ளன.

சீனாவில், 11 வகையான தடுப்பூசிகள் பல்வேறு கட்ட பரிசோதனையில் உள்ளன. அதில், மூன்று தடுப்பூசிகள், மூன்றாம் கட்டப் பரிசோதனையில் உள்ளன.பல நாடுகளில், தானாக முன்வந்து மக்கள், தடுப்பூசி பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், சீனாவில், குறிப்பிட்ட சிலரை தேர்ந்தெடுத்து, அவர்களை கட்டாயப்படுத்தி, ரகசியமாக தடுப்பூசி மருந்துகள் பரிசோதனை நடப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.அரசு அதிகாரிகள், அரசு நிறுவன ஊழியர்கள், தடுப்பூசி தயாரிக்கும் நிறுவன ஊழியர்கள் ஆகியோர், இந்தப் பரிசோதனைக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

அவர்களிடம், ‘பரிசோதனை நடத்தப்படுவது குறித்த தகவல்களை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது’ என, ரகசிய ஒப்பந்தத்தில் கையெழுத்தும் பெறப்படுவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஆனால், இதை சீனா மறுத்துள்ளது. ‘உலக சுகாதார அமைப்பு, ஜூலை மாதத்தில் வழங்கிய ஒப்புதலின்படியே, பரிசோதனைகள் நடக்கின்றன. எந்த விதிமீறலும் இல்லை’ என, சீன தேசிய சுகாதார கமிஷனின் உயரதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.’பாதுகாப்பு உறுதி செய்யப்படாத நிலையில், கட்டாயப்படுத்தி, ரகசியமாக, அதுவும் வெளியே பேசக்கூடாது என்று மிரட்டப்பட்டு, தடுப்பூசி வழங்கப்படுவது, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது’ என, மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here