கொரோனா சோதனை ஓவர்.. விரைவில் படப்பிடிப்பு துவக்கம்

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழகம் முழுக்க வரவேற்பு பெற்றது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியின் முதல் மூன்று சீசன் முடிந்துள்ள நிலையில் தற்போது 4வது சீசன் துவங்க உள்ளது.

இந்த நிகழ்ச்சியும் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவது உறுதியாகிவிட்டது. கொரோனா ஊரடங்கினால் ஷூட்டிங் தள்ளி சென்றுள்ளது. பிக்பாஸ் 4 நிகழ்ச்சி அக்டோபர் மாதம் துவங்கவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கமல்ஹாசனே ஒரு வீடியோ மூலம் வெளியிட்டார்.மேலும், பிக்பாஸ் போட்டியாளர்கள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது. இறுதி கட்ட பரிசோதனையிலும் யாருக்கும் கொரொனா பாசிட்டிவ் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

எனவே, படப்பிடிப்புக்கு பிக்பாஸ் குழு தயாராகி வருகிறது. இதற்காக சென்னை பூந்தமல்லியில் ஸ்டுடியோ அமைக்கப்பட்டுள்ளது.ஆக்டோபர் 4ம் தேதி நிகழ்ச்சி துவங்கவுள்ளது. எனவே, அதற்கான படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here