நடிகர் சங்க தலைவரான மனோபாலா

சின்னத்திரை நடிகர் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மனோபாலாவுக்கு நடிகர் சௌந்தரராஜா தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தை போல் சின்னத்திரை நடிகர் சங்கமும் இருந்து வருகிறது. இன்று இந்த சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் தமிழ் சினிமாவில் முக்கிய வேடங்களில் நடிக்கும் மனோபாலா ஏகமனதாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து தன்னை தலைவராக தேர்ந்தெடுத்ததற்கு தனது நன்றிகளை அனைவருக்கும் மனோபாலா தெரிவித்தார். அதோடு என்றும் சின்னத்திரைகாக எனது உழைப்பை கொடுப்பேன் என்று உறுதி கூறினார். மனோபாலா சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அறிந்த நடிகர் சௌந்தரராஜா நேரில் சென்று அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here