உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.51 கோடியை கடந்தது. சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 51 லட்சமாக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 3 கோடியே 51 லட்சத்து 27 ஆயிரத்து 596 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 79 லட்சத்து 67 ஆயிரத்து 878 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 66 ஆயிரத்து 070 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. வைரஸ் பாதிப்பில் இருந்து 2 கோடியே 61 லட்சத்து 21 ஆயிரத்து 777 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனாவால் இதுவரை 10 லட்சத்து 37 ஆயிரத்து 941 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-
அமெரிக்கா – 7,600,846
இந்தியா – 6,547,413
பிரேசில் – 4,906,833
ரஷியா – 1,204,502
கொலம்பியா – 848,147
பெரு – 824,985
ஸ்பெயின் – 810,807
அர்ஜெண்டினா – 790,818
மெக்சிகோ – 757,953
தென் ஆப்பிரிக்கா – 679,716
கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-
அமெரிக்கா – 214,277
பிரேசில் – 101,812
இந்தியா – 146,011
மெக்சிகோ – 78,880
ஸ்பெயின் – 32,086
பெரு – 32,665
பிரான்ஸ் – 32,198
ஈரான் – 26,746
கொலம்பியா – 26,556
ரஷியா- 21,251
கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகள்:-
இந்தியா – 5,506,732
அமெரிக்கா – 4,818,509
பிரேசில் – 4,248,574
ரஷியா – 975,859
கொலம்பியா – 757,801
பெரு – 700,868
தென் ஆப்ரிக்கா – 612,763
அர்ஜெண்டினா-626,114
மெக்சிகோ-545,530