சென்னையின் 75 சதவீத குடிநீர் தேவை

சென்னையின் குடிநீர் தேவையில், 75 சதவீதத்தை கடல் நீரை வைத்து சமாளிக்க, வாரியம் தீவிரம் காட்டி வருகிறது.சென்னையின் குடிநீர் தேவையை சமாளிக்க, தமிழக அரசு கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

ஒப்பந்தம்மீஞ்சூர் மற்றும் நெம்மேலி பகுதிகளில் உள்ள நிலையங்களில், கடல்நீர் சுத்திகரிக்கப்பட்டு, தலா, 10 கோடி லிட்டர் வீதம், தினமும், 20 கோடி லிட்டர் குடிநீர், வினியோகிக்கப்பட்டு வருகிறது.தற்போது, நெம்மேலியில், கூடுதலாக, 15 கோடி லிட்டர் உற்பத்தி திறன் உள்ள கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான, கட்டுமான பணிகள் நடக்கின்றன. மேலும், பேரூரில், 40 கோடி லிட்டர் உற்பத்தி திறன் உடைய, கடல் நீர் சுத்திகரிப்பு நிலைய திட்டத்திற்கான, ஒப்பந்தம் கோரும் பணிகள் துவங்க உள்ளன.இந்த இரு திட்டங்களையும், இன்னும் இரண்டு ஆண்டுகளில், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வாரியம் திட்டமிட்டுள்ளது.

குடிநீர் பஞ்சம்கடல் நீர் குடிநீராக்கும் திட்டங்கள் வாயிலாக மட்டும், பொதுமக்களுக்கு தினமும், 75 கோடி லிட்டர் குடிநீர் வினியோகிக்கப்பட வாய்ப்புள்ளது.சென்னையில் தற்போது, தினசரி, குடிநீர் தேவை, 85 கோடி லிட்டர். மாநகரின் ஒட்டுமொத்த தேவையானது, அடுத்த, இரண்டு ஆண்டுகளில், 95 கோடி லிட்டர் வரை, அதிகரிக்க வாய்ப்புள்ளது.மாநகரின் குடிநீர் தேவை, தற்போது பெரும்பாலும் ஏரிகளை சார்ந்தே உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், பருவமழை பொய்த்துப்போனால், ஏரிகள் வறண்டு குடிநீர் பஞ்சம் ஏற்படுவது, தொடர் கதையாகி வருகிறது.இதனால், இன்னும் இரண்டு ஆண்டுகளில், கடல் நீரால், ஒட்டு மொத்தமாக, 75 சதவீத குடிநீர் தேவையை பூர்த்தி செய்து விட, வாரியம் தீவிரம் காட்டி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here