காஜல் அகர்வால் இன்று தனது திருமண தேதியை வெளியிட்டார். 35 வயதான காஜல் “அக்டோபர் 30-ம் தேதி திருமணம் செய்துக் கொள்ள உள்ளதாக சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
திருமண நிகழ்வை மிகச் சிறிய அளவில் ஏற்பாடு செய்துள்ளதாகவும், திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து நடிக்க உள்ளதாகவும் காஜல் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பல ஆண்டுகள் எனக்கு வழங்கிய அன்பிற்கு நன்றி. இந்த நம்ப முடியாத புதிய பயணத்திற்கு எங்களை ஆசீர்வதியுங்கள். நீங்கள் விரும்புவதை தொடர்ந்து செய்வேன்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக திருமண நிகழ்ச்சிகள் இரண்டு நாட்கள் நடைபெறும் என்று கூறப்படுகிறது. அத்துடன், அதற்காக முக்கிய இடம் புக் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காஜல் அகர்வால் மற்றும் கிச்சுலு கடந்த மாதம் நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டதாக கூறப்படுகிறது. காஜல் சிச்சுலுவை தொழில்முனைவோர் என்று குறிப்பிடுகிறார். அவர், இன்டீரியர் டிசையினர் என்றும் கூறப்படுகிறது.