செந்தூல் போலீசாரின் அதிரடி சோதனை நடவடிக்கை

எம்சிஓ காலகட்டத்தில் செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சண்முக மூர்த்தி சின்னையா மற்றும் 9 அதிகாரிகள், 26 காவல் துறை பணியாளர்களுடன் கெப்போங், தாமான் உஸ்சாவகான் பகுதியில் இயங்கி வரும் உணவகங்களில் இரவு 8 மணி தொடங்கி 11 மணி வரை சோதனை நடத்தினர்.

போலீசார் மேற்கொண்ட சோதனையில் பொதுமக்கள் எஸ்ஓபியை கடைபிடிக்கின்றனர் என்பது கண்டறியப்பட்டது. அதே வேளை அப்பகுதியில் இயங்கி இரவு கேளிக்கை மையத்திற்கு சம்மன் வழங்கப்பட்டது. அவர்களிடம் பொழுது போக்கு லைசன்ஸ் இல்லாததால் வழங்கப்பட்டது.

இந்த சோதனை நடவடிக்கை தொடரும் என்றும் அதே வேளை பொதுமக்கள் முகக்கவசம் மற்றும் கை தூய்பான் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும் என்று ஏசிபி சண்முகமூர்த்தி அறிவுறுத்தினார்.

படங்கள்: எல்.கே.ராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here