பயிர்மேயும் வேலிகள்

உள்ளூர் பிரபலங்கள் தொடர்பான பணமோசடியில்  ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் ஐந்து போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

எந்த விவரங்களையும் வெளியிடாமல், தலமை துணை போலீஸ் இன்ஸ்பெக்டர் டத்தோஶ்ரீ அக்ரில் சானி அப்துல்லா சானி இன்று இரவு இந்தச்செய்தியை  உறுதிப்படுத்தினார்.

தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விசாரணைக்கு உதவ இந்த ஐவரும் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர் என்று அவர் கூறினார்.

இதுவரை, ஐந்து போலீசார் மட்டுமே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் இந்த பணமோசடி சிண்டிகேட் தொடர்பான விசாரணையை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் (எம்ஏசிசி) ஒப்படைத்தேன் என்று அவர்  மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பான வளர்ச்சியில், புக்கிட் அமான் நேர்மை, தரநிலை இணக்கத் துறை இயக்குநர் டத்தோ ஜாம்ரி யாஹ்யா, பணமோசடி வழக்கு மக்காவ் மோசடிக்கும்பலுடன் ஏதாவது தொடர்பு கொண்டுள்ளதா என்றும் விசார்க்கப்படுவதாக அவர்  சுருக்கமாகக் கூறினார்.

இதற்கிடையில், தடுத்து வைக்கப்பட்டுள்ள போலீஸ் அதிகாரிகளில் ஒருவரின் வீட்டில் சுமார் வெ.100 ஆயிரம் ரொக்கப்பணத்தை கண்டுபிடித்ததாக MACC வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சில உள்ளூர் கலைஞர்களால் நடத்தப்படும் வணிகங்களுடன் இணைக்கப்பட்ட பணமோசடி சிண்டிகேட்டில் போலீஸ் அதிகாரிகள் ஈடுபடுவது குறித்து சமூக ஊடகங்களில் சில செய்திகளின்  கூற்று குறித்து காவல்துறை உள் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தது.

அக்., 1 இல், பணமோசடி நடவடிக்கைகள் தொடர்பான விசாரணையில் ஒரு கலைஞர் தம்பதியினரை MACC வரவழைத்ததாக தெரிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here