சிறுமி பாலியல் பலாத்காரம் – விவசாயிக்கு 5 ஆண்டு சிறை

கள்ளக்குறிச்சியை அடுத்த வரஞ்சரம் அருகே உள்ள சின்னமாம்பட்டு கிராமத்தை சேர்ந்த 17 வயதுடைய சிறுமி, கடந்த 29.4.2005 அன்று அதே பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் இருந்து ஆட்டுக்கு தண்ணீர் கொடுப்பதற்காக ஒரு பாத்திரத்துடன் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த அதே கிராமத்தை சேர்ந்த துரைசாமியின் மகன் ஏழுமலை (29) என்ற விவசாயி, அந்த சிறுமியை அங்குள்ள நிலத்திற்கு வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று அங்கு வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

உடனே சிறுமி கூச்சல் போடவே அவரது உறவினர்கள் விரைந்து சென்று ஏழுமலையை மடக்கிப்பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏழுமலையை கைது செய்து கள்ளக்குறிச்சி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

பின்னர் இவ்வழக்கு, விழுப்புரம் மகளிர் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி, குற்றம் சாட்டப்பட்ட ஏழுமலைக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும், இந்த அபராத தொகையை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார்.

இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஏழுமலை, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ராதிகா செந்தில் ஆஜரானார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here