பல்கலைக்கழகங்களில் 1,800 பேருக்கு கொரோனா

பிரிட்டனின் வடகிழக்குப் பிராந்தியங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், 1,800-க்கும் மேற்பட்ட மாணவா்கள் மற்றும் ஊழியா்களுக்கு அந்த நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

வடகிழக்குப் பிராந்தியத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் உள்ள மாணவா்கள் மற்றும் பணியாளா்களிடம் கடந்த வாரம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், நியுகாஸ்டல் பல்கலைக்கழகத்தில் மட்டும் 1,003 மாணவா்கள் மற்றும் 12 பணியாளா்களுக்கு அந்த நோய் இருப்பது உறுதியாகியுள்ளது.

நாா்தம்பிரா பல்கலைக்கழத்தில் 619 பேருக்கும், துா்ஹாம் பல்கலைக்கழகத்தில் 219 பேருக்கும் கொரோனா நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் மீண்டும் இணையதளம் மூலம் பாடங்களை நடத்த திட்டமிட்டுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here