அரிய மண் சுர்ங்க விவகாரம், -முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள்

பார்கோட் செயல்முறை உருவாக்கம்

போலி ஆவணங்கள் விவகாரங்களை எதிர்கொள்வதற்கு மாநில நில – சுரங்க அலுவலகத்திற்குச் சோதனை மற்றும் பேச்சுவார்த்தை இலாகா 13டி பாரத்தின் தரத்தை உயர்த்த பரிந்துரை செய்தது.

குறிப்பாக அந்தப் பாரங்களின் உண்மைத்தன்மையை உறுதிசெய்ய பார்கோட் முறையை உருவாக்கவும் அந்த இலாகா ஆலோசனை வழங்கி இருந்தது. முன்னதாக சுரங்க முதலாளி தரப்பினர் ஒரு வெள்ளி கட்டணம் ஙெ்லுத்தி அந்த 13டி பாரங்களைப் பெற்றுக்கொள்ளலாம். இருப்பினும் முறையான உரிம ஆவணங்கள் இல்லாத அரிய மண் சுரங்க முதலாளிகளுக்கு இடைத்தரகர்கள் இந்த ஆவணங்களை சட்டவிரோதமாக விற்க முற்பட்டுள்ளனர்.

அந்த அரிய மண்ணை ஏற்றிச் செல்வதற்கு போக்குவரத்து அம்சத்தின் அடிப்படையில் 13டி பாரங்களை அந்த இடைத்தரகர்கள் 100 வெள்ளியில் இருந்து 200 வெள்ளி வரை சட்டவிரோத சுரங்க முதலாளிகளிடம் விற்றுள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.
அந்தப் பாரத்தைக் கொண்டு ஒருமுறை என்ற அடிப்படையில் லோரி ஓட்டுநர்கள் அரிய மண்ணை ஏற்றி துறைமுகங்களுக்குக் கொண்டுசெல்ல முடியும்.

இருப்பினும் சோதனைகள் இருந்தால் அதிகாரிகளிடம் அந்தப் பாரத்தைச் சமர்ப்பிக்கவில்லை. உரிமத் தொகை செலுத்துவோரின் கணக்கெடுப்பிற்காக அந்தப் பாரத்தில் முன்னதாக துறைமுகங்களில் முத்திரைபெற வேண்டும்.

இதனைக் கருத்தில் கொண்டு அந்த 13டி பாரம் பாதுகாப்பு அம்சங்களையும் கியூஆர் குறியீட்டையும் உள்ளடக்கி பிரத்தியேகத் தாளில் அச்சடிக்கப்பட்டது.
இந்தச் செயல்முறைக்கு மாநில நில – சுரங்க அலுவலக இயக்குநர் டத்தோ ஹாஜி ஃபாட்ஸிலா ஆதரவு வழங்கியுள்ளார்.

இ – மினரல் செயல்முறை வழி விண்ணப்பம்

இந்த 13டி பாரங்களைப் பெறுவதற்கு நில – சுரங்க அலுவலகத்தில் மட்டுமே விண்ணப்பம் செய்ய முடியும். அதுவும் மின்னியல் முறையில் அதற்கான செயல்முறைகள் முன்னெடுக்கப்படுவதற்கு 2005ஆம் ஆண்டு கனிம சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டது.

இந்த மின்னியல் முறையிலான விண்ணப்பத்தின் வழி போலி ஆவணங்கள் விவகாரங்களைக் குறைக்க முடிந்தது. குறிப்பாக 2015ஆம் ஆண்டு இது தொடர்பில் 62 புகார்கள் பதிவுசெய்யப்பட்ட வேளையில் 2018ஆம் ஆண்டு மூன்று புகார்கள் மட்டுமே பதிவுசெய்யப்பட்டன. அதற்கு மறுஆண்டு இரண்டு புகார்கள் மட்டுமே பதிவுசெய்யப்பட்டன. இந்த மின்னியல் முறையிலான விண்ணப்பத்தின் மூலம் நல்விளைவுகளை வெளிப்படுத்துகின்றன.

புதிய பிரிவு

இதுதவிர 13டி பாரங்களில் குற்றம் மற்றும் அபராத அம்சங்களையும் பகாங் மாநில நில-சுரங்க அலுவலகம் இணைத்தது. 2001 பகாங் மாநில கனிம வளச் சட்டத்தின் அடிப்படையில் அந்த அம்சங்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டன. இந்த அம்சங்களின் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு 50 ஆயிரம் வெள்ளிக்கு உட்பட்ட அபராதமும் 3 ஆண்டுகளுக்குக் குறையாத சிறைத்தண்டனையும் விதிக்க வகைசெய்யப்பட்டது.

அதிகாரிகளைக் கண்காணிக்கும் அம்சம்

முன்னதாக பகாங் மாநில நில – சுரங்க அலுவலக அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அதிகாரத்துஷ்பிரயோக விவகாரங்கள் அனைத்தும் ஆரம்பக்கட்ட கண்காணிப்பு இல்லாததால் ஏற்பட்டவையாகும்.

வாய்ப்புகள் பெரிதளவு இருந்ததால் ஒருசில அதிகாரிகள் அதனைப் பயன்படுத்தி சட்டவிரோத சுரங்க முதலாளிகளிடம் இருந்து பணம் பெற்று வந்தனர். இதனைக் கருத்தில் கொண்டு நீர், நில மற்றும் கனிம வள அமைச்சு ஏற்றுக்கொள்ளப்பட்ட பெர்மிட் விண்ணப்ப செயல் முறைகளைக் கவனிக்கும் அதிகாரிகள் மீது கண்காணிப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தியது.

அரிய மண் சுரங்க மேலாண்மைத் திட்டத்தை வலுப்படுத்துதல்

கடந்தாண்டு செப்டம்பர் 5ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட பகாங் மாநில அரிய மண் சுரங்க மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகள் குறித்த நடவடிக்கை விதிமுறைகளை சுரங்க முதவாளி தரப்பினர் முறையாகக் கடைப்பிடிப்பதை உறுதிசெய்ய ஓஎம்எஸ் எனப்படும் விதிமுறைகளை நீர், நில மற்றும் கனிம வள அமைச்சு பகாங் மாநில நில, சுரங்க அலுவலகத்துடன் இணைந்து வலுப்படுத்தியது.

அந்த விதிமுறைகள் முழுமையாகக் கடைப்பிடிக்கப்படுவதை உறுதிசெய்ய பகாங் மாநில கனிம சுரங்க நடவடிக்கைகள் கண்காணிப்பு செயற்குழுவிற்கு ஏதுவாக 6 மாதங்கள் பயிற்சி கால அவகாசமும் வழங்கப்பட்டது.

அந்தச் செயற்குழுவிற்கு மாநில நில – சுரங்க அலுவலக இயக்குநர் தலைமையேற்றிருந்தார். மேலும் 14 அமலாக்க இலாகா பிரதிநிதிகள் அதில் இடம்பெற்றிருந்தனர்.

அரிய மண் சுரங்கத்துறைக்கு நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் வகையில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் வழங்கும் ஒவ்வொரு திட்டமும் அமைந்தாலும் தேசிய மற்றும் மாநில அளவிலான இது சம்பந்தப்பட்ட அனைத்து இலாகாவினரும் தங்களின் பங்கினை சிறப்பாக வகிப்பது அவசியமாகின்றது.

– எழுத்து: நஸ்லீ ரஷிட் ஹாஜி சுலோங்

ஆய்வு மற்றும் ஆலோசனைப் பிரிவு இயக்குநர்
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here