இயக்குனராகும் ஜெயம் ரவி -யார் நடிகர் தெரியுமா?

ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக இருப்பவர். ஆரம்பத்தில் அப்பா மோகன் தயாரிப்பில் அண்ணன் ராஜா இயக்கத்தில் ஜெயமான நாயகனாக அறிமுகம் ஆனவர். இன்று தனித்து ஜனரஞ்சகமான ஹீரோ என மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.

சென்ற வருடம் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளியாகி ஹிட் அடித்த படம் கோமாளி. இதில் காமெடியன் என்பதை விட ஜெயம் ரவியுடன் கதை நகர முக்கிய வேடத்தில் யோகி பாபு நடித்திருப்பார். யோகி பாபு தான் ஜெயம் ரவி படம் இயக்கும் ஆலோசனையில் இருப்பதாய் பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றி சொல்லியுள்ளார்.

ஜெயம் ரவி தான் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் யோகி பாபுவை ஹீரோவாக நடிக்கவைப்பராம். மேலும் அவர் ஏற்கனவே கதையை அவரிடம் விவரித்துவிட்டதாகவும் சொல்லியுள்ளார். ஜெயம் ரவி நடிப்பில் பிஸியாக இருப்பதால் இயக்குநராக a வைத்தாராம் எடுப்பது தள்ளிபோகிறதாம்.

ஹீரோவாக நடிக்கும் முன் ஆளவந்தான் படத்தில் சுரேஷ் கிருஷ்ணாவிடம் உதவியாளராக பணியாற்றினார். விரைவில் படத்தை இயக்குங்க ஜெயம் ரவி, வீ ஆர் வைட்டிங்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here