சட்டவிரோத குப்பை கொட்டும் இடத்தில் தீ

சிலாங்கூர் சுற்றுச்சூழல் துறை (டிஓஇ) நேற்று பந்திங் பகுதியில் சட்டவிரோத குப்பை கொட்டும் தளத்தில் சந்தேகத்திற்கிடமான கேபிள் உறைகள் , மின் இணைப்புப் பலகைகள் குவியல்களை எரித்ததைக் கண்டறிந்தது.

மலேசியாவின் வேதியியல் துறையினர் ஒரு ஹைப்பர் மார்க்கெட்டுக்கு அருகில் அமைந்துள்ள சட்டவிரோத இடத்திலிருந்து மூன்று மாதிரிகளை எடுத்துள்ளதாக அதன் இயக்குநர் நோர் அசியா ஜஃபார் தெரிவித்தார்.

பொறுப்பற்றவர்களால் மேலும்  எந்தவிதமான ஊடுருவலையும் தவிர்க்க இப்பகுதியில்  தடை நாடா கட்டப்பட்டுள்ளது.

சட்டவிரோத குப்பை கொட்டும்  தளத்தின் நில உரிமையாளரைத் தேடி வருவதாகவும், அருகிலுள்ள தொழிற்சாலைகள் அத்தகைய கழிவுகளை உற்பத்தி செய்வதைக் கண்டறிந்து அதன் விசாரணையை முடுக்கிவிட்டிருப்பதாகவும்  அவர் கூறினார்.

சுற்றுச்சூழல் தரச் சட்டம் 1974 இன் 29 ஏ , 34 பி பிரிவுகளின் கீழ் இக்குற்றம் விசாரரிக்கப்பட்டுவருகிறது.

இதற்கிடையில், சிலாங்கூர் தீயணைப்பு, மீட்புத் துறை இயக்குநர் நோராசாம் காமிஸ், தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தீயைக் கட்டுப்படுத்த போராடியதாகக் கூறினார்.

முன்னதாக, திறந்த, எரியும் நிலையில் உள்ள ஒரு நிமிடம்  14 விநாடி வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகியது, இது அருகிலுள்ள பல கிராமங்களில் காற்று மாசுபாட்டை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here